Home /viluppuram /

விழுப்புரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

விழுப்புரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விழுப்புரம் மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரம் மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவளம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாம நந்தல், எதப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி