முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

X
தண்ணீர்

தண்ணீர் திறக்கும் ஆட்சியர்

Viluppuram | விழுப்புரத்தில் மாவட்டத்தில் வீடூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் பாசனத்திற்காக வீடூர் அணையிலிருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து வைத்தார் விழுப்புரம் ஆட்சியர் மோகன். இதன்மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பருவ மழையினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைந்துள்ள வீடூர்  அணை முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. வருடம் தோறும் தை மாதத்தில் பாசன வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆண்டு பாசனத்திற்காக அணையின் நீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை அடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு, அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினர்.

இன்று முதல் பாசன வசதிக்காக 135 நாட்களுக்கு 328.56 மில்லியன் கன அடி நீர் தேவைக்கேற்ப திறந்துவிடப்படுகிறது. இந்த அணை திறப்பு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் என ஆக மொத்தம் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறக்கூடும்.

அம்மாவைக் கண்டுபிடித்து தாருங்கள்...விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கன்றுக்குட்டி

 உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13