ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்: மாற்றுத்திறனாளிகள் இடத்துக்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

விழுப்புரத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்: மாற்றுத்திறனாளிகள் இடத்துக்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

X
விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து ஆட்சியர் மனுக்களைப் பெற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளிக்கின்றனர். இம்மனுக்களை ஆட்சியர் மோகன் நேரடியாக பெறுகிறார்.

அதுபோல மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மோகன் பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை புரிவார்கள். தங்களுக்கு இருக்கிற குறைகளான வீட்டு பிரச்சனை, வீட்டுமனை பட்டா பிரச்சனை, ஆக்கிரமிப்பு, சாலை வசதிகள், தண்ணீர் வசதிகள், கிராமத்திற்கு அடிப்படை வசதி வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குறித்து மனு எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வருகிறார்கள்.

விழுப்புரம் ஆட்சியர்

இக்கூட்டத்திற்கு பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள், மாற்றுத்திறனாளி என அனைவரும் வருகிறார்கள். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் மோகன் மாற்றுத்திறனாளி இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களது குறைகளையும் பிரச்சனையும் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

அந்த மனுவில் பல மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு காது கருவி வேண்டும், இலவச மிதி வேண்டி வேண்டும், இலவச வீடு வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வைத்திருந்தனர். அதில் ஒரு சில கோரிக்கைகளை அந்த இடத்திலேயே மாவட்ட ஆட்சியர் மோகன் நிவர்த்தி செய்தும் மற்ற மாற்றத்தினாளிகளிடமிருந்து கோரிக்கை மமனுவை பெற்றுக்கொண்டு, கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என கூறினார் மாவட்ட ஆட்சியர் மோகன்.

செய்தியாளர்: பூஜா, விழுப்புரம்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13