44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிக்கான குறியீடு ஸ்டிக்கரை அச்சிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் உலக அளவில் 186 நாடுகள் பங்கேற்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள, விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் போட்டிக்கான லோகோ பேருந்துகள், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லுாரி பேருந்துகளில், ஆட்டோக்களில் செஸ் போட்டிக்கான லோகோ ஸ்டிக்கர் ஒட்டும் பணியை ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்.

பேருந்தை கொடியசைத்து துவக்கும் ஆட்சியர்
இந்த போட்டிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற பேருந்துகள், ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் பல்வேறு வகையான போட்டிகள் வாயிலாகவும், அதேபோல் மகளிர் குழுக்கள் மூலமாகவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தகிறது.

பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதைப் பார்க்கும் ஆட்சியர்
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடந்தாலும் நம் ஊரில் நடப்பது நமக்கு பெருமை என்ற மனநிறைவோடு எல்லோரும் மகிழ்ச்சியோடு இப்போட்டியை வரவேற்றிடும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் அதிகளவு கலந்துகொண்டு செஸ் போட்டியின் சிறப்புத்தன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.