விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஏரியில் கழிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் விடப்படுவதால், பாதிப்பு ஏற்படுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு வெப் செய்தியில் (05.07.2022)பதிவிட்டிருந்தோம். இச்செய்தியின் எதிரொலியாக ஆட்சியர் மோகன்,எம் எல் ஏ லட்சுமணன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதியிலிருந்து குழாய்கள் மூலமாக கழிவு நீர் கொண்டுவரப்பட்டு காகுப்பம் ஏரியிலுள்ள பாதாள சாக்கடை கழிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் விடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே ஏரியில் விடுவதால் கால்நடைகளுக்கு கருச்சிதைவு, பொதுமக்களுக்கு தோல் நோய்கள், அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசடைவதாக நியூஸ் 18 தமிழ்நாடு வெப் மூலமாக 05.07.2022 அன்று செய்தியாக வெளியிடப்பட்டது.
இதனையடுத்து ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் காகுப்பத்தில் இயங்கி வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது இயந்திரங்களின் செயல்பாடுகளை முறையாக கண்காணிப்பதுடன், நாள்தோறும் நகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மூலமாக முழுமையாக சுத்திகரித்து பின்னர் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும் எவ்வகையிலும் பொதுமக்களுக்கோ, கால்நடைகளுக்கோ மற்றும் விளைநிலங்களுக்கோ தீங்கு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார் .
அதுமட்டுமல்லாமல் சுத்திகரிப்பு மையம் சரியாக இயங்குவதை உறுதி செய்து கொள்வதுடன் பொதுமக்கள் புகார் அளிக்காத வண்ணம் நகராட்சி நிர்வாகம் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.