Home /viluppuram /

Viluppuram | மாற்றுத்திறனாளியுடன்‌ தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்ட ஆட்சியர்

Viluppuram | மாற்றுத்திறனாளியுடன்‌ தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்ட ஆட்சியர்

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர்

Viluppuram | விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் ஆட்சியர் மோகன் தரையில் அமர்ந்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் ஆட்சியர் மோகன் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மூன்று சக்கர வாகனம், காது கேளாதோர் காது கேட்கும் கருவி, இலவச வீடுகட்டும் திட்டத்தில் வீடு, கடை நடத்த லோன் வழங்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெறும் போது இரண்டு கால்களை இழந்தவர்கள் மேடைக்கு வந்து மனுக்கள் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால், ஆட்சியர் மோகன் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திலேயே சென்று பெற்றுக்கொண்டார்.

குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர்


அதுமட்டுமல்லாமல் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மனு கொடுக்க வரும்போது தரையிலே அமர்ந்து மனுவை பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து காது கேளாதோர், மூன்று சக்கர வாகனம் வழங்க கோரிக்கை வைத்தவர்களுக்கு உடனடியாக கூட்டத்திலேயே மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

அதுபோல பத்து வருடங்களாக காது கேட்க முடியாது இருந்த மாற்றுத்திறனாளிக்கு காது கேட்கும் மெஷின் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆட்சியர் உடனடியாக ஏற்று,காது கேட்கும் இயந்திரம் வழங்க உத்தரவிட்டார். அதன்பின் மாற்றுத்திறனாளிக்கு காதுகேளாதோர் மெஷின் வழங்கப்பட்டது.

இது போன்று பல்வேறு செயல்கள் மாற்றுதிறனாளிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிதொகை, இலவச வீடு கட்டி தர கேட்டவர்களுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் மோகன் உறுதி அளித்தது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பல தாலுகாவில் இருந்து அதிகப்படியான கோரிக்கைகள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை எச்சரிக்கை செய்தார். மேலும் கூட்டம் நிறைவு பெறும் வரை அமர்ந்திருந்து மாற்றுதிறனாளிகளின் குறைகளை ஆட்சியர் மோகன் கேட்டறிந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி