Home /viluppuram /

10,12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுலவகத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு

10,12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுலவகத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது குறித்து விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    10, 12ம் வகுப்பு படித்துள்ள மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    எனவே மாணவர்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்றவுடன் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை போன்ற அசல் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in ல் இணையம் மூலமாக அனைவரும் பதிவுசெய்து கொள்ளலாம்.

    மேலும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள், புதுப்பித்தல் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலமாகவும் பதிவுசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், இந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவினை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தகவலை மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி