Home /viluppuram /

கொரோனா பாதிப்பு: சிறு, குறு தொழில் முனைவோர் மானியம் பெறுவது எப்படி?

கொரோனா பாதிப்பு: சிறு, குறு தொழில் முனைவோர் மானியம் பெறுவது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனாவால் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    கொரோனாவால் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.

    கொரோனாவால் பாதிப்படைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டமானது கோ்-1, கோ் -2 என இரு பிரிவுகள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

    கோ் -1 திட்டப்படி 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தாமாக அல்லது தமது சட்டபூா்வ வாரிசுகள் மூலமாக
    ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோல மற்றொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழில் தொடங்க தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்ஸ்) மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறலாம்.

    இதில் திட்ட மதிப்பீடு அதிக பட்சம் ரூ. 5 கோடி வரை இருக்கலாம். இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

    இந்த உதவி பெறும் பயனாளி 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

    அரிசி ஆலை, கால்நடை தீவனம் தயாரித்தல், மசாலா பொருள்கள், ஹாலோ பிளக்ஸ், பி.வி.சி பைப், ரப்பா் பொருள்கள், என்ஜினியரிங் பேப்ரிகேசன் போன்ற தொழில் நிறுவனங்கள் தொடங்க இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

    கோ்-2 திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம்
    செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் 25 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

    2020-ஆம் ஆண்டு மாா்ச் 23ம் தேதிக்கு பிறகு தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரி மூலம் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், விழுப்புரம்- 605 602. (தொலைபேசி எண் : 04146 - 226602 , 223616 என்று எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி