Home /viluppuram /

சலவைத் தொழில் செய்வோருக்கு நிதியுதவி - விழுப்புரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

சலவைத் தொழில் செய்வோருக்கு நிதியுதவி - விழுப்புரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் நிதியுதவி பெறுவது குறித்து விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், சலவைத்தொழிலில் செய்வோர் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    விழுப்புரம் ஆட்சியர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’2022-23-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவைத் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்திடவும், தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த 75 லட்ச ரூபாய் நிதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    நிதியுதவி பெற தகுதி என்ன?

    குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும்.

    குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்ததை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

    ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியானவை தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி