விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் இயங்கி வரும் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ரினி டானியா. 15 வெவ்வேறு வடிவமான கனசதுரத்தினை 5 நிமிடம் 43 நொடியில் சேர்த்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டியுள்ளார்.
விழுப்புரம் ஜான்டூயி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ரினி டானியா. இந்த மாணவி கொரோனா காலகட்டத்தில் அந்த நாட்களை பயனுள்ளதாக மாற்றுவதற்காக, பல்வேறு வகைகளில் கவனத்தைச் செலுத்திவந்தார். இந்நிலையில் யூ டியூப் மூலம் சில வீடியோக்களை பார்க்கும் போது, ரூபிக்ஸ் கன சதுரத்தை சேர்க்கும் வீடியோ வந்துள்ளது, அதனை கவனித்த டானியா, அந்த வீடியோவை அடிக்கடி பார்த்து, பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 7 மாத பயிற்சியில், பல்வேறு வடிவங்களை கொண்ட கன சதுரங்களை சேர்க்கும் திறமையை வளர்த்துள்ளார். இந்த செயலை இம் மாணவியின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்குவித்து வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, 15 பல்வேறு வடிவமான ரூபிக்ஸ் கனசதுரத்தை 5 நிமிடம் 43 நொடியில் தீர்க்கும் நிகழ்வில் சாதனை புரிந்துள்ளார்.
இந்த சாதனையை பாராட்டி, ரூபிக்ஸ் கனசதுரத்தை இளம் மாணவிகள் தீர்வு என்ற புத்தகத்திலும் ( The young girl to solve most unique varieties of rubik cube's in record time ), எதிர்கால கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்திலும்( Future kalam's Book of record's ), பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த விருது குறித்து மாணவி டானியா கூறுகையில், இந்த விருது வாங்கியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் குறைவான கால கட்டங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும், தங்கள் திறமையை என்னவென்று கண்டுபிடிப்பதற்கும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தவேண்டும் என மாணவி கூறியுள்ளார்.
இந்த உலக சாதனை புரிந்த மாணவி ரினி டானியாவை , மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.