Home /viluppuram /

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நாடகம் மூலம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு.. விழுப்புரத்தில் புதுமை.. 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நாடகம் மூலம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு.. விழுப்புரத்தில் புதுமை.. 

விழுப்புரம்

விழுப்புரம்

World Breastfeeding Week : விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார தின கொண்டாட்ட விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு நாடகம் மூலம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக அனைத்துப் பகுதிகளிலும் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலக வாய்ப்பால் தினவிழாவில் தாய்ப்பால் குறித்த முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் பற்றி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுபோல விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆல் தி சில்ரன்ஸ் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் தின வார விழா கர்ப்பிணி தாய்மார்கள் உடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

நாடகம் வழியே தாய்மார்களுக்கு விழிப்புணர்வு..


நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற  உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து கர்ப்பிணி தாய்மார்கள் வருகை புரிந்தனர்.

இரண்டாவது முறை கருவுற்ற தாய்மார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்கள் எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும், காய்கறிகள் மற்றும் கீரைகள், பழவகைகள், பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளுக்கு எதை பயன்படுத்த வேண்டும் இதை பயன்படுத்தக்கூடாது போன்ற அனைத்து தகவல்களையும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது.

நாடகம் வழியே தாய்மார்களுக்கு விழிப்புணர்வு..


மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை நாடகம் மூலமாக அரங்கேற்றி கர்ப்பிணி தாய்மார்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்கள் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை கண்காட்சியாக வைத்திருந்தனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி கர்ப்பிணி தாய்மார்கள் கூறியதாவது, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று தாய்ப்பால் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்ப்ப காலத்தில் ஒரு சில பழங்களை நாங்கள் தவிர்த்து வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு தான் கர்ப்ப காலத்தில் அனைத்து பழங்களையும் உட்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து வகையான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரியவந்தது. மேலும் இந்த விழுப்புரம் நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களை எங்களுக்கு கூறினர் இந்த தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களான எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த உலக தாய்ப்பால் வார விழாவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ஜோதி, மற்றும் செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா மற்றும் ஊழியர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி