முகப்பு /விழுப்புரம் /

கல்வெட்டுகளை படிப்பது எப்படி? மாணவர்களுக்கு பாடம் எடுத்த வரலாற்று ஆய்வாளர்!

கல்வெட்டுகளை படிப்பது எப்படி? மாணவர்களுக்கு பாடம் எடுத்த வரலாற்று ஆய்வாளர்!

X
கல்லூரி

கல்லூரி மாணவர்களுக்கு கோயில்கள் கல்வெட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வு

Villupuram News | விழுப்புரத்தில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை எப்படி படிக்க வேண்டும் என்பதை பற்றி வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல பழமையான கோயில்கள் உள்ளது. இத்தகைய கோவில்களின் சிறப்புகளைப் பற்றியும் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றியும் நிச்சயமாக கல்லூரி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என எண்ணி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறை பயிலும் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கோயில்களான ஆதிவாலீஸ்வரர் கோயில் , ஸ்ரீ வைகுண்ட வாசகப் பெருமாள் கோயில், பெரிய சிவன் கோவில் என மூன்று கோயில்களில் கல்லூரி மாணவர்களுடன் வரலாற்று துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளரான ரமேஷ் ஆகியோர் சேர்ந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கள ஆய்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த கள ஆய்வில் கோயில்களின் கட்டிடங்கள், கோயிலில் உள்ள கல்வெட்டுகள், பழைய பெயர்கள், சிற்பங்கள் குறித்தும், எப்படி ஆயம் மேற்கொள்ள வேண்டும், கோயில் சிறப்புகள் பற்றியும், கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் குறித்து மை படிவம் பயிற்சியும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வருகை புரிந்த கல்லூரி மாணவர்கள் இந்த ஆய்வு குறித்து தெரிவிக்கையில் ”இது போன்ற கள ஆய்வும் செய்முறை பயிற்சி மிகப் பயனுள்ளதாக இருந்தது. புத்தகத்தில் மட்டும் பார்த்து ரசித்த வரலாறுகளையும் சிற்பங்களை பற்றி தெரிந்து கொண்டதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது” என வருகை புரிந்த கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13