முகப்பு /விழுப்புரம் /

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

X
கோவில்

கோவில் கும்பாபிஷேகம்

Viluppuram | விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே பசுக்களுக்கு கொம்பு வழங்கிய பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதி காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்ததால் பல்வேறு கொடிய விலங்குகளால் தாக்கப்பட்டு அழிவை சந்திக்க நேரிட்டது.

அப்போது கொடிய விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தங்களுக்கு கொம்புகளை வழங்க வேண்டும் என பசுக்கள் திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரரை வணங்கி தவம் செய்ததால் சிவபெருமான் பசுக்களுக்கு கொம்பு வழங்கியதாக புராண வரலாறுகள் கூறுகிறது.

இதன் காரணமாக பசுக்கள் தவமிருந்து கொம்புகளை பெற்ற ஸ்தமாகவும், நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், நடுநாட்டு சிவ ஸ்தலங்களில் 21-வது சிவ ஸ்தலமாவும் பிரசித்தி பெற்று விளங்கி வரும் திருவாமாத்தூரில் உள்ள முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி யாகசால பூஜைகள் செய்யப்பட்டு, மேள, தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.  இதனைத்தொடர்ந்து 7 நிலைகளுடன் கூடிய 92 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம், 5 நிலைகளுடன் கூடிய 62 அடி உயரம் கொண்ட முத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரம், விநாயகர், முருகர், மூலவர், அம்பாள், காமதேனு ஆகிய சன்னதிகளின் விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்களை முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரூ.1 லட்சம் பரிசு... சிறந்த திருநங்கை விருது - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

First published:

Tags: Local News, Viluppuram S22p13