Home /viluppuram /

தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம்- மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கும் இளைஞர்

தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம்- மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கும் இளைஞர்

துடைப்பம்

துடைப்பம் செய்யும் இளைஞர்

விழுப்புரத்தில் துடைப்பம் விற்று மாதம் 30,000 ரூபாய் வரை இளைஞர் சம்பாதித்து வருகிறார்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிளாட்பார்மில், தென்னை துடைப்பம் விற்பனை செய்து வரும் இளைஞரான மதிவாணன், பாரம்பரிய தொழிலான இத்தொழிலில் மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிளாட்பார்மில் தென்னங்கீற்று துடைப்பம் விற்பனை செய்து வருகிறார் மதிவாணன் என்ற இளைஞர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.

மதிவாணன் எட்டாம் வகுப்பு வரைதான் கல்வி பயின்றுள்ளார். அவருடைய தந்தை, தாய் தென்னை தொடப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தால் அதன் தொடர்ச்சியாக இவரும் அதே தொழிலை கையில் எடுத்துள்ளார். பல கஷ்டங்கள், துன்பங்கள் இந்தத் தொழிலில் நிறைந்திருந்தாலும் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறேன் என கூறுகிறார் மதிவாணன்.

துடைப்பம் செய்யும் இளைஞர்


 

மேலும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்தை தேர்வு செய்து, தென்னங்கீற்று துடைப்பத்தை விற்பனை செய்து வருகிறோம். நாங்க துடைப்பத்திற்கான குச்சியை மொத்தமாக செங்கல்பட்டு பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மொத்தமாக வாங்கி, அதனை சரியான முறையில் பிரித்து கட்டி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, ராஜஸ்தான், பாட்னா, செங்கல்பட்டு போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

துடைப்பம் செய்யும் இளைஞர்


அதுமட்டுமல்லாமல் சாலையோரத்தில் வைத்து வேலை பார்க்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களும் இந்த தென்னங்கீற்று துடைப்பத்தை வாங்கி செல்வார்கள். சில்லரையாக தனியாக துடைப்பம் வாங்குபவர்களிடம் 30 ரூபாய்க்கு விற்கிறோம். மொத்தமாக கடைகளுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மாதத்திற்கு 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்.

அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் துடைப்பங்கள்


அதுமட்டுமல்லாமல் படித்திருந்தால் நல்ல வேலைக்கு போகலாம். அந்த நிலைமை எனக்கு கொடுத்து வைக்கல. இருந்தாலும் இந்த  தொழில் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாள் கூட நான் பிளாட்பார்மில் தென்னை கீற்று துடைப்பம் விற்கிறேன் என நான் கவலைப்பட்டது இல்லை.

யார்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்காமல் சொந்தத் தொழில் செய்வது எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது என நம்பிக்கையுடன் கூறினார் மதிவாணன். செய்யும் தொழிலை நேசித்து செய்தால் கஷ்டம் தெரியாது என புன்னகையுடன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி