விழுப்புரம் மலட்டாறு ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கின.
சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் எஸ்.மேட்டுப்பாளையம் – பரசுரெட்டிப்பாளையம் இடையே செல்லும் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்திற்கு மேல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. அப்பகுதி மக்கள், பிற பகுதிகளுக்கு செல்வதற்கு, ஊரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது .அதே போல் பில்லூர் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இரு தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பரசுரெட்டிப்பாளையம் கிராம மக்கள் 4 கி.மீ., தூரமும், பில்லூர் அடுத்துள்ள அரசமங்கலம், குச்சிப்பாளையம், சேந்தனுார் கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் மாற்று பாதை வழியாக சுற்றி பிற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வீடுர் அணை நிரம்பியுள்ளதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பிற்காக அதில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரை ஓரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களும் , நீர்நிலைகளில் அருகில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flood, Heavy rain, Local News, Villupuram, Viluppuram S22p13