முகப்பு /விழுப்புரம் /

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்.. பார்த்து வியக்கும் விழுப்புரம் மக்கள்! 

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்.. பார்த்து வியக்கும் விழுப்புரம் மக்கள்! 

X
மாணவர்களின்

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்

Villupuram Yezhumalai Polytechnic Exhibition : விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் மாணவர்களின் தொழில் பயிற்சிகளின் செயல் திட்ட கண்காட்சி விழா நடைபெற்றது. 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் - சென்னை சாலை ஓரத்தில் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களின் தொழில் பயிற்சிகளின் செயல் திட்ட கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சி விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளின் தொழில் பயிற்சிகளின் செயல்திட்ட கண்காட்சிகள் துறைவாரியாக நடைபெற்றது.

இதில் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட ப்ராஜெக்ட்டுகள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது கல்லூரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் கண்காட்சியை சக மாணவர்களிடம் எடுத்துரைத்து கண்காட்சி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரியின் தலைவர் செல்வமணி பேசுகையில், “மாணவர்களின் செயல் திறனை கண்டு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கண்காட்சிகளை சிறந்த தொழில்நுட்பத்தினை மாணவர்களிடம் ஏற்படுத்தி சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும், புதுமை கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்குவதே இதன் நோக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபோன்ற கண்காட்சிகள், வளர்ந்து வரும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடையும், எனவே, மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டு அவர்களுக்கு உதவி செய்வது அவசியம்” என்றார். இக்கண்காட்சியில் துணை முதல்வர் ஷங்கர் நிர்வாக அலுவலர் குப்புசாமி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram