ஹோம் /விழுப்புரம் /

'உருவ அமைப்பில் மட்டும் அல்ல.. கனவும் ஒன்றே..' தடகளத்தில் சாதிக்க துடிக்கும் விழுப்புரம் இரட்டையர்கள்..

'உருவ அமைப்பில் மட்டும் அல்ல.. கனவும் ஒன்றே..' தடகளத்தில் சாதிக்க துடிக்கும் விழுப்புரம் இரட்டையர்கள்..

X
விழுப்புரம்

விழுப்புரம் இரட்டையர்கள்

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டம்,காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இரட்டையர்கள் தடகள போட்டியில் சாதனை புரிந்து வருகின்றனர். அவர்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

உருவ அமைப்பில் மட்டும் அல்ல கனவிலும் ஒன்றையே கொண்டு சாதிக்க துடிக்கும் விழுப்புரம் இரட்டையர்கள்.

விழுப்புரம் அரசு காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஏழமலை(14) மற்றும் மகாகணபதி(14). இருவரும் விழுப்புரம் குருசாமி பிள்ளை தெருவில் வசிக்கின்றனர். தந்தை சத்திவேல் (47), தாய் ரமாதேவி (45), அக்கா மற்றும் ஒரு தம்பி உள்ள நிலையில் இவரது தந்தை முடி திருத்தும் வேலை செய்து வருகிறார்.

இளம் வயதில் இருந்தே தடகள போட்டிகள் மீது தீராத ஆர்வம் இருவருக்கும் வந்துள்ளது. உருவ அமைப்பில் மட்டும் ஒற்றுமை அல்ல, காணும் கனவுகளை கூட இருவரும் ஒன்றாகவே கண்டனர். ஏழமலை தடை தாண்டி ஓட்டம், மகாகணபதி டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கு பெற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி கண்டு, தற்போது மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏழ்மை நிலையிலும், தந்தை தடகள போட்டிக்கு ம்கன்களுக்கு தேவையான காலணிகள் மற்றும் ஆடைகளை வாங்கி கொடுத்து இவர்களின் பயிற்சிக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : பி.எம்.கிசான் : விழுப்புரம் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவுரை - மிஸ் பண்ணாதீங்க...

இந்த இரட்டையர்கள் தினந்தோறும் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று காலையிலும் மாலையிலும் பயிற்சி பெற்று வருகின்றனர் . மேலும் , பள்ளியின் ஒரு பகுதியில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இருவரும் போட்டிக்காக கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 14 வயதுக்குட்பட்டோருக்கான தடை தாண்டும் ஓட்டத்தில் ஏழுமலை கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 110 மீட்டர் தூர போட்டியில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். மேலும் தற்போது அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோன்று இரட்டையர்களில் மற்றொருவரான மகாகணபதி ட்ரிபில் ஜம்ப் போட்டிக்கான கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். இவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் 11 மீட்டர் தூரம் தாண்டி தனது வெற்றிகளை பதிவு செய்து, பல பரிசுகளை பெற்று உள்ளார்.

இவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அதுமட்டுமல்லாமல், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் இரட்டையர்கள் இருவரும், பங்கு பெற்று வெற்றி பெறுவதற்கு இருவரும் விடா முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போதுமான நிதி உதவி, வேறு எந்த வசதியும் இல்லாமல் இருப்பதால் பல சிரமங்களையும் துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இம் மாணவர்கள் இருவரும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு, மாநில விளையாட்டுத்துறை ஸ்பான்சர் செய்தால் அல்லது தன்னார்வலர்கள் உதவி புரிந்தால் நிச்சயமாக மாநில அளவில் வெற்றி கண்டு, தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கான அனைத்து திறமைகளும் தன்னம்பிக்கை தங்களுக்கு இருக்கிறது என நம்பிக்கையுடன் இரட்டையர்கள் இருவரும் கடின பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Local News, Vizhupuram