விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நிலவிவரும் கடுங்குளிரால், ஸ்வெட்டர் மற்றும் கம்பளி ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை இயல்பை விட மிகவும் குறைந்து கடுமையான குளிர் நிலவி வருகிறது. தண்ணீரில் கை வைத்தாலோ அல்லது தரையில் கால் பட்டாலே ஜில் என்ற நடுக்கம் வந்து விடுகிறது.
அதிகாலை கடுமையான பனிப்பொழிவு பெய்ததன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி மெதுவாக செல்கின்றனர். மார்கழி மாதம் பிறக்காத நிலையில் இவ்வளவு பனி காணப்படுவதால் இன்னும் மார்கழி மாதம் எப்படி இருக்குமோ பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வாட்டி வதைக்கும் இந்த குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் கதகதப்பான சூழலை தேடுகின்றனர்.
அதேபோல் குளிரை சமாளிக்க கதகதப்பான ஆடைகளான கம்பளி, போர்வை, ஸ்வர்ட்டர், குல்லா போன்றவை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதனை சாதகமாக பயன்படுத்திய சிறிய வியாபாரிகள் உல்லன் துணிகளை விற்க தொடங்கிவிட்டார். விழுப்புரம் காந்தி சிலை அருகே போர்வை, ஸ்வட்டர் குரங்கு குல்லா, ஷால், ஆகியவற்றின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 க்கும் மேற்பட்ட போர்வைகள் கம்பளிகள் விற்பனை ஆகிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஸ்வட்டர்கள் அதிக அளவில் விற்பனை ஆவதாகவும், 150 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஸ்வெட்டர் விலை உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் உள்ள ஸ்வெட்டர், குரங்கு குல்லா, ஷால், கம்பளி ஆகியவற்றை வாங்கிச் செல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வடமாநிலத்தவர் அதிக அளவில் உல்லன் துணிகளோடு தமிழகத்திற்கு வந்துள்ளனர். தலைச்சுமையாகவும், சைக்கிளிலும், டூவீலரிலும் கம்பளி, போர்வைகளை வைத்துக்கொண்டு வீதி, வீதியாக சென்று விற்பனை செய்கின்றனர். திடீரென அதிகரித்துள்ள குளிர் காரணமாக கம்பளி போர்வை உள்ளிட்டவை விற்பனை சூடு பிடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Snowfall, Villupuram, Viluppuram S22p13