முகப்பு /விழுப்புரம் /

இனி விவசாய நிலங்களை விலங்குகள் சேதமாக்காது.. விழுப்புரம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..

இனி விவசாய நிலங்களை விலங்குகள் சேதமாக்காது.. விழுப்புரம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..

X
விழுப்புரம்

விழுப்புரம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

Villupuram Student : சென்சாரில் இயங்கும் புதிய கருவியை விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் கண்டுபிடித்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் சவிதா தியேட்டர் அருகே வசிக்கும் விஜயகுமார் - தனலட்சுமி தம்பதியரின் மகனான விஜய் வர்மன்(13), இவர் விழுப்புரம் சேகரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 8 வகுப்பு படிக்கிறார். சமீப காலங்களில் விலங்குகள் வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், பல பகுதிகளில் விலங்குகள் விவசாயிகளின் நிலத்தையும், பயிர்களையும் சேதமாக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து விலங்குகளையும், விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பதிலும் பொதுமக்கள், விவசாயிகள், வன அதிகாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், விஜய்வர்மன் நில பகுதிகளில் விலங்குகள், கால்நடைகள், மனிதர்கள் வருவதை சென்சார் கொண்டு 500 மீட்டர் இடைவெளியிலியே வருவதை உணர்ந்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.

விழுப்புரம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

இதன் மூலம் சென்சார் மூலம் பட்டாசு ஒலி எழுப்பி வேலியில் சிக்காமல் விலங்குகளையும், கால் நடைகளையும், பொதுமக்களையும் காப்பாற்றவும், விலங்குகளிடமிருந்து பயிர்கள் சேதமாவதை தடுக்கும் வகையில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என விஜய்வர்மன் கூறினார்.

இதுகுறித்து விஜய்வர்மன் கூறுகையில், “இந்த கருவி கண்டுபிடிக்க காரணம் எனது பாட்டி வீடான விராட்டிக்குப்பம் சென்றிருந்தபோது இரவு நேரத்தில் திடீரென வயலில் பட்டாசு வெடித்தது. நான் என்ன சத்தம் என்று கேட்டேன். அப்போது பாட்டி விலங்குகள் பயிர்களை சேதம் ஆகாமல் தடுப்பதற்காக விவசாயிகள் இந்த பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அப்போது சில சமயங்களில் விவசாயிகளின் கையிலும் பட்டாசு திடீரென வெடித்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் சில விலங்குகள் இறப்பதற்கு கூட நேரிடும் என பாட்டி தெரிவித்தார். அதன் பிறகு தான் நான் இந்த கருவியை கண்டுபிடித்தேன். இந்த கருவியை கண்டுபிடிப்பதற்கு எனக்கு 6 மாதங்கள் ஆனது. நிச்சயமாக இந்த கருவிகள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Technology, Villupuram