தமிழ் மொழி மீது கொண்ட அதீத பற்றால் தமிழ் துறையில் சேர்ந்து இளங்கலை படிப்பை முடித்து மாவட்ட அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் சவுந்தர்யா பற்றிய செய்தித்தொகுப்பு.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் வசித்து வருபவர் சவுந்தர்யா(21), இவரது பெற்றோர் சிவ சண்முகம் சீதாலட்சுமி. அப்பா செப்டிக் டேங்க் கிளீன் செய்பவர் , அம்மா ஹவுஸ் வைஃப்.
தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராக வலம் வரும் சவுந்தர்யா இளங்கலை பட்டப்படிப்பில் தமிழை தேர்வு செய்து படித்து முடித்தார். படித்து முடித்த கையோடு மாவட்ட அளவில் நடைபெற்ற பல பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் கலந்துக்கொண்டு என்னெற்ற பரிசுகளை வாங்கி விழுப்புரம் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தார்.
இதையும் படிங்க : விழுப்புரத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்
சவுந்தர்யாவுக்கு தொடக்கப் பள்ளியில் பயிலும் காலத்தில் இருந்தே, தாய்மொழியின் மீதான பற்றும், சமூக சேவை புரிய வேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்துள்ளது.
தமிழோடு பல கலைகளிலும் தேர்ந்தவர் ஆனார் சவுந்தர்யா. இடைவிடாமல் 17.45 மணி நேரம் ஓவியம் வரைந்து ஆல் இந்தியா புக் ஆப் த ரெக்கார்டு- ல் இடம்பெற்றார்.
இதுமட்டுமின்றி இதுபோல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரியாகவும் வளம் வருகிறார் சவுந்தர்யா. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 26 விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது கவிதை, புத்தகம் எழுதுவதில் தன் கவனத்தை திருப்பி வரும் சவுந்தர்யா, “பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் என அனைவருமே தமிழ் மொழியை நிச்சயமாக மதித்து அதன் தொன்மையையும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் .
அது மட்டுமல்லாமல் உலகளவில் தமிழ் மொழியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிய வைக்க வேண்டும்” என சவுந்தர்யா கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இலவச பேருந்து, மாதம் ஊக்கத்தொகை, தமிழ்வழி முன்னுரிமை என பெண்களுக்காக அடுக்கடுக்கான பல திட்டங்களை அறிவித்த, தமிழக முதல்வர், திறமையின் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறையில் தனக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram