ஹோம் /விழுப்புரம் /

தேசிய அளவிலான வாலிபால் போட்டிக்கு விழுப்புரம் மாணவி தேர்வு.. கொண்டாடும் மக்கள்!

தேசிய அளவிலான வாலிபால் போட்டிக்கு விழுப்புரம் மாணவி தேர்வு.. கொண்டாடும் மக்கள்!

X
Villupuram

Villupuram student selected for national level volleyball tournament.

viluppuram Student | விழுப்புரம் அருகே பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த மாணவி சித்ரா, தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  சித்ரா. இவர் தேசிய அளவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

தேசிய அளவில் நடைபெறவுள்ள கைப்பந்து போட்டிக்கு விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.

விழுப்புரம் அருகே பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த மாணவி சித்ரா, தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சித்ரா. இவர் தேசிய அளவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

விழுப்புரம் அருகே பிரம்மதேச பகுதியை சேர்ந்த சித்ரா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். பெற்றோர்கள் விவசாயக் கூலி வேலை செய்பவர்கள். சித்ராவுடன், இரண்டு பெண் பிள்ளைகளும் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள். அதில் சித்ரா படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

கைப்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஐந்து வருடமாக பயிற்சி பெற்று வருகிறார். தமிழக அளவில் வெற்றி கண்டு தற்போது தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். சித்ராவிற்கு பள்ளி சார்பிலும் நல்ல உற்சாகம் மற்றும் பயிற்சி கொடுக்கப்பட்டு அவரின் திறமை ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சித்ரா கூறும்போது “ கைப்பந்து சங்கத்தினரால் மாநில அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த 16 மாணவர்களில் ஒருவராக நான் பங்கேற்றேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள 44 வது தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளேன்.”என்று தெரிவித்தார்.

சித்ரா, விழுப்புரம், மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மாணவியுடன் பள்ளி ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Villupuram