முகப்பு /விழுப்புரம் /

தந்தையை இழந்த நிலையில் தேர்வை எழுதிய விழுப்புரம் மாணவி பள்ளியில் 2ம் இடம் பெற்று சாதனை!

தந்தையை இழந்த நிலையில் தேர்வை எழுதிய விழுப்புரம் மாணவி பள்ளியில் 2ம் இடம் பெற்று சாதனை!

X
தந்தையை

தந்தையை இழந்த நிலையில் தேர்வை எழுதிய விழுப்புரம் மாணவி

Villuppuram Student : விழுப்புரம் அடுத்த கோவிலூரில் தந்தை உயிரிழந்த போதும் மனம் தளராமல் தேர்வு எழுத சென்ற 10ம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அடுத்த திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த போதும் மனம் தளராமல் தேர்வு எழுத சென்ற 10ம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் . இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மூன்றாவது மகளான திலகா அருகே உள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தையை இழந்த நிலையில் தேர்வை எழுதிய விழுப்புரம் மாணவி

இந்த நிலையில், தந்தையின் இழப்பின் மூலம் துவண்டு போன நிலையிலும், நன்றாக படிக்க வேண்டும் என்று தந்தை கூறிய சொல்லிற்காக அவரின் மறைவிலும் மனம் தளராது உறுதியுடன் தேர்வு எழுத வந்தார் மாணவி திலகா. மாணவியை உறவினர்கள் கட்டித்தழுவி அழுது தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். இறந்த அப்பாவை மனதில் நினைத்து மிகுந்த சோகத்தோடு தேர்வுக்கு சென்றார் மாணவி.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 428 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார் மாணவி திலகா. தந்தை உயிரிழந்த சோகத்திலும் மகள் தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண் பெற்றது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் 428 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவி திலகா கூறும்போது, எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படித்து, அரசு துறைக்கு வேலைக்கு போக வேண்டும் கூறுவார் தற்போது அதுதான் என்னுடைய ஆசை என நம்பிக்கையுடன் தெரிவித்தார் மாணவி திலகா.

    First published:

    Tags: 11th Exam, Local News, Villupuram