விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், ஆலகுப்பம் பகுதியில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்கள் கல்வி படிப்பு மேற்கொள்வதற்கு சாதி சான்றிதழில் ST என மாவட்ட நிர்வாகம் தர வேண்டும் என நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இளைஞர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நரிக்குறவர் சமூகத்தில் இருந்து பள்ளிக்கு படிக்க வருவதே குறைவு. அதிலும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பபட்டு வரும் மாணவர்களை பல காரணங்களை கூறி ஒதுக்குவது என்பது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் செல்வது ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய கடமையுமாகும்.
அந்தவகையில், விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், ஆலகுப்பம் பகுதியில் சுமார் 25 நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் தொழில் பாசிமணி, பாத்திரங்கள் விற்பதாகும். இந்த குடும்பங்களில் இருந்து ஒரு சிலர் மட்டும் பள்ளியில் படிக்க முன் வருகின்றனர். அதில் பிரபு என்ற இளைஞர் தற்போது +2 படித்து முடித்துள்ளார். மேலும் பிரபு கல்லூரி படிப்பை தொடர மாவட்டம் நிர்வாகம் சாதி சான்றிதழ் விரைந்து வழங்கிட வேண்டுமென பிரபு மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது பற்றி பிரபு கூறுகையில், எங்கள் விழுப்புரம் ஆலங்குப்பம் பகுதியில் உள்ள நரிக்குறவர் இனத்திலேயே முதல் மாணவராக பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளேன்.
நான் காந்தி குப்பத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் +1 படித்து வந்தேன். அப்போ நான்கு பாடத்தில் தோல்வி அடைந்தேன். அதன் காரணத்தால் பள்ளி நிர்வாகத்தால் கட்டாயப் படுத்தி TC வாங்கி கொள்ளவேண்டும், என்று என்னையும் என் பெற்றோரையும் பள்ளி நிர்வாகம் கட்டாய படுத்தியதால், TC வாங்கிக்கொண்டேன்.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியர் மற்றும் DEO அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கி நடந்த நிகழ்வுகளை விளக்கி கூறி அதன் வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி, நான் மீண்டும் பள்ளிக்கு சென்று +2 படிப்பை முடித்தேன். அதன்படி, +2 வில் வணிக பிரிவில் 268 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனேன். மேலும் நான் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எனக்கு சாதி சான்றிதழில் MBC என்று குறிப்பிட்டுள்ளது.
இதனை மாற்றி ST என்று குறிப்பிட்டு தந்தால் என்னுடைய கல்லூரி படிப்பை தொடர எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் எனக்கு விரைந்து சாதி சான்றிதழ் வழங்குமாறு பிரபு மாவட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிரபுக்கு உதவிய சமூக ஆர்வலர் சாபுவிக்னேஷ் கூறுகையில், 12/11/2022 அன்று மாலை முனைவர் பட்ட ஆய்விற்கான தரவுகள் சேகரிக்கும் (Data Collection) பணிக்காக விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், ஆலகுப்பம் பகுதியில் உள்ள சுமார் 25 குடும்பங்கள் வாழும் நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உதவுவதற்காக காத்திருந்தார் தம்பி பிரபு. மேலும் பிரபுவின் வாயிலாகவும் மற்றும் அங்கிருந்த பிறரின் வாயிலாகவும் எனது ஆய்விற்கான தரவுகளை நேரில் சந்தித்து சேகரித்து கொண்டேன்.
இதையும் படிங்க | தங்கை மீது காதல்.. மறுத்த தந்தை.. நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்
மேலும் நான் ஒருசில சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் பிரபு +2 முடிக்க உதவி செய்தோம். தேர்ச்சி பெற்ற பிரபுவை பாராட்டி நன்றியை தெரிவித்தோம்.பிரபு கல்லூரி படிப்பு தொடர்வதற்கு மாவட்ட நிர்வாகம் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் சாபுவிக்னேஷ் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results, Local News, Viluppuram S22p13