Home /viluppuram /

விழுப்புரம் நகர சாலைகளில் அச்சத்துடன் சென்று வரும் மக்கள்.. மாவட்ட தலைநகருக்கு ஏன் இந்த அவலம்...

விழுப்புரம் நகர சாலைகளில் அச்சத்துடன் சென்று வரும் மக்கள்.. மாவட்ட தலைநகருக்கு ஏன் இந்த அவலம்...

விழுப்புரம்

விழுப்புரம் - பழுதான சாலைகள்

Villupuram District News : விழுப்புரம் நகராட்சி விரிவாக்க பணிக்காக பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மணிநகர் 4 வது குறுக்கு  தெரு, சாலாமேடு, வழுதரெட்டி ஸ்ரீராம் நகர், கவுதம் நகர், சுப்பிரமணியசாமி நகர், 30 வது வார்டு லட்சுமி நகர், உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட தார், சிமெண்ட் சாலைகளை உடைத்து பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும், சரியான முறையில் மூடப்படாத நிலையில், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மணிநகர் 4 வது குறுக்கு  தெரு, சாலாமேடு, வழுதரெட்டி ஸ்ரீராம் நகர், கவுதம் நகர், சுப்பிரமணியசாமி நகர், 30 வது வார்டு லட்சுமி நகர், கௌதம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி விரிவாக்க பணிக்காக பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட தார், சிமெண்ட் சாலைகளை உடைத்து பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியால் நகராட்சியில் உள்ள பல்வேறு நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் - பழுதான சாலைகள்


தற்போது, விழுப்புரம் நகரில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால், பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட சாலைகள் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. விழுப்புரம் மணிநகர் 4 வது குறுக்குத் தெரு, சாலாமேடு, வழுதரெட்டி ஸ்ரீராம் நகர், கவுதம் நகர், சுப்பிரமணியசாமி நகர், 30 வது வார்டு லட்சுமி நகர், கௌதம் நகர், உள்ளிட்ட நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் சேற்றில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலையும் நீடித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ செல்வதற்கு சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் .

விழுப்புரம் நகர சாலைகளில் அச்சத்துடன் சென்று வரும் மக்கள்..


நடந்து செல்லும் போது வழுக்கி விழும் நிலை இருப்பதால் பொதுமக்கள் பயந்து பயந்து இந்த சாலையில் நடந்து செல்கிறோம் என கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதிவாசிகள். மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்தில் உள்ள சாலைகள் சாதாரண மழைக்கே சேறும், சகதியுமாக மாறியுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்படும் பள்ளங்கள் சிமெண்ட் கலவை வைத்து மூடப்பட வேண்டும். ஆனால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணியாளர்கள், மண்ணை போட்டு மூடிவிடுகின்றனர். இதையடுத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். பாதாள சாக்கடை பணியின் இந்த அவல நிலை குறித்து நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழுப்புரம் நகராட்சியில் தண்ணீர் பிரச்சனை போன்று சாலை பிரச்சனையும் அதிகரித்து வருகிறது என பொதுமக்கள் கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நகராட்சி எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் நகர சாலைகளில் அச்சத்துடன் சென்று வரும் மக்கள்..


இனி வருவது மழைக்காலமாக இருப்பதால் தற்காலிகமாக இந்த சாலைகளில் மண் அல்லது சிமெண்ட் கலவை கொண்டு நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி