Home /viluppuram /

விழுப்புரம் மக்களின் இளநீர் மோகம்..  

விழுப்புரம் மக்களின் இளநீர் மோகம்..  

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District Latest News | விழுப்புரம்  மக்கள் அதிகளவில் இளநீர் வாங்கி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மக்கள் அதிகளவில் இளநீர் வாங்கி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குளிர்பானங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இளநீர் தேங்காய் பூ, கற்றாழை ஜூஸ் போன்ற குளிர்பானங்களை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுவும் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் ஜூஸ் வகைகளை சாப்பிடுவதில் இன்னும் கவனம் செலுத்தி வருகிறார்கள் பொதுமக்கள்.

அந்தவகையில் விழுப்புரம் நகரில் பெரும்பாலான இடங்களில் இளநீர் வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உட்லண்ட்ஸ் உணவகம் அருகே கடந்த 25 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் இளநீர் விற்பனை செய்து வரும் வியாபாரி வேலுவிடம் இது தொடர்பாக பேசினோம்.

இதையும் படிங்க:  மாடுகளை கட்டிப்போடும் இடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்.. இடவசதியில்லாத கன்னிகாபுரம் அரசு பள்ளியின் அவலநிலை..

மரகதபுரம், ஆனங்கூர் போன்ற பகுதிகளிலிருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாகவும், இளநீரில் இருக்கும் தண்ணீரின் அளவை பொறுத்து ஒரு இளநீர் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

காலை வாக்கிங் செல்பவர்கள் 5 மணிக்கே இளநீர் வாங்க வருவதால் அதிகாலையிலேயே வியாபாரம் பரபரப்பாக தொடங்கிவிடுவதாகவும். உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் இளநீரை வாங்கி பருகுகின்றனர். விலையும் அதற்கேற்றாற்போல் இருப்பதால் பொதுமக்கள் தயக்கமின்றி இளநீர் பருக ஆர்வம் காட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழுப்புரம் பொதுமக்களின் ஆதரவு காரணமாக இளநீர் வியாபாரம் தங்களின் வாழ்வாதாரத்துக்கு கைகொடுப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி