ஹோம் /விழுப்புரம் /

Cyclone Mandous : மாண்டஸ் புயலால் வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட்... வீட்டுக்குள் முடங்கிய விழுப்புரம் மக்கள்... 

Cyclone Mandous : மாண்டஸ் புயலால் வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட்... வீட்டுக்குள் முடங்கிய விழுப்புரம் மக்கள்... 

X
வெறிச்சோடிய

வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட்

Villuppuram District News : மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் விழுப்புரம் பேருந்து நிலையம் பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் விழுப்புரம் பேருந்து நிலையம் பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இரவு கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இரவில் பேருந்துகள் இயக்கப்படாது என பல்வேறு போக்குவரத்து கோட்டங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மதியம் முதலே பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடி கிடந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே பயணிகள் இருந்தனர்.

இதையும் படிங்க : Mandous Live : 130 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல்.. வெளுக்கத்தொடங்கியது மழை!

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது. நேரம் ஆக ஆக காற்றின் வேகமும் மழையும் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் மரக்காணம் திண்டிவனம் உள்ளிட்ட பல பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அதேபோல் புயல் காரணமாக நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் கடலோரம் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆங்காங்கே முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Vizhupuram