முகப்பு /செய்தி /விழுப்புரம் / கதவை பூட்டி விட்டு மாமியார் வீட்டுக்கு சென்ற மகன்... வீட்டின் முன் ஒருவாரமாக காத்துக்கிடக்கும் பெற்றோர்..! - நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கதவை பூட்டி விட்டு மாமியார் வீட்டுக்கு சென்ற மகன்... வீட்டின் முன் ஒருவாரமாக காத்துக்கிடக்கும் பெற்றோர்..! - நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

மகனுக்கு எதிராக போராடும் பெற்றோர்

மகனுக்கு எதிராக போராடும் பெற்றோர்

Villupuram Old Couples | கடந்த ஓரு வாரமாக வயதான தம்பதி பொருட்களுடன் வீட்டு வாசலியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் வீட்டை அபகரித்துக்கொண்டு தாய், தந்தையை பெற்ற மகனே வெளியேற்றியதால், வயதான தம்பதி ஒரு வாரமாக வீதியிலேயே பொருட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்துவின் முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், முதல் மனைவிக்கு இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு 3 பேருக்கும் தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதிவைத்தார் இதில், மாரிமுத்து, தனது மனைவியுடன் வசித்த வந்த வீட்டை இளைய மகன் வெங்கடேஷ் சேர்த்து எழுதிக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பின்னர் அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு வயதான பெற்றோரை வெளியேற்றிவிட்டு வீட்டை அபகரித்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், பெற்றோரை இளைய மகன் வெங்கடேஷ் அவருடைய வீட்டில் வைத்து பராமரிக்க அண்மையில் திண்டிவனம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அத்துடன், மூத்த மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தவும் அறிவுறுத்தினார்.

top videos

    இந்த உத்தரவை அடுத்து, கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துகொண்டு, மாரிமுத்து தனது மனைவியுடன் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்றவிட்டார். இதனால், கடந்த ஒரு வாரமாக வயதான தம்பதி பொருட்களுடன் வீட்டு வாசலியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    First published: