ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி ஏற்பு விழா

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி ஏற்பு விழா

X
Villupuram:

Villupuram: Inauguration ceremony of the winners of the urban local elections

Villupuram: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 210 பேர் பதவியேற்று கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விழுப்புரம் :உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரவேண்டுமென்ற உணர்வோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி கவுன்சிலர்கள் செயல்பட வேண்டுமென புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கவுன்சிலர்களின் பதவியேற்பு விழாவில்உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 210 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகளில் மொத்தமாக 102 இடங்களில் 64 இடங்களையும் 7 பேரூராட்சிகளில் உள்ள 108 இடங்களில் திமுகவினர் 66 இடங்களை பிடித்து 3 நகராட்சி மன்ற தலைவர் மற்றும் 7 பேரூராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 7 பேரூராட்சிகளில்என மொத்தமாக 10 இடங்களில் 210 பேர் பதவியேற்று கொண்டனர்.

விழுப்புரம் நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி ஆட்சியர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணப்படி உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரவேண்டுமென்ற உணர்வோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராட்சி,பேரூராட்சி, கவுன்சிலர்கள் செயல்பட வேண்டுமென உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local Body Election 2022, Villupuram