ஹோம் /விழுப்புரம் /

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் படும் அவதி - கண்டுகொள்ளுமா விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்?

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் படும் அவதி - கண்டுகொள்ளுமா விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்?

X
Unshaded

Unshaded Bus Stand - People suffer

villupuram medical college | விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கடலூர்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிலையத்தில் நிழற்குடையில் அமைக்கப்படததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து விதமான சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் உள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியின் நுழைவாயில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிறுத்தத்தில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Villupuram