மகா சிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்று கூறுவார்கள். இப்பண்டிகை புகழ்பெற்ற ஒரு இந்து பண்டிகையாகும்.ஒவ்வொரு வருடமும், இந்து ஆண்டுக் குறிப்பேட்டின் படி, மாசி மாதத்தில் இப்பண்டிகைகொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து, சிவபெருமானை புகழ்ந்து மந்திரங்களும் ஸ்லோகங்களும் படிப்பார்கள்.
பகல் மற்றும் இரவு முழுவதும் பலர் விரதம் இருக்கவும் செய்வார்கள். சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் வில்வ இலைகளை படைத்த பின்னரே காலை உணவை உட்கொள்வார்கள்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவான மார்ச் 1ம் தேதியன்று 1,008 சங்கு அபிஷேகமும், வேள்வி வழிபாட்டுடன் 12 ஜோதிலிங்கத்திற்கு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
முதலில் சிவனுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தனாபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதி அபிஷேகம் போன்ற பல அபிஷேகங்கள் சாமிக்கு செய்யப்பட்டது.மேலும் ஏராளமான பக்தர்கள் வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்த பூஜையானது இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரைநடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
மேலும் 1008 சங்குகள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த மகா சிவராத்திரியில் பக்தர்கள் தங்களின் குறைகளை தீர்ப்பதற்காகவும், தங்களை காப்பாற்றிய கடவுளான சிவபெருமானுக்கு கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள்.
அதுபோல விழுப்புரத்தில் ஆதி வாலீஸ்வரர் கோயில் மகா சிவராத்திரி பூஜை இரவு தொடங்கி காலை வரை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Villupuram