விழுப்புரம் கா. குப்பம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன . இப்பகுதியில் பெரிய அளவிலான காகுப்பம் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் விவசாய நீர் பாசனத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் .
அதன் பின்பு 2007 ஆண்டு பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்தனர் . இத்திட்டத்தை எதிர்த்து , பொதுமக்கள் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார்கள் மனு அளித்து வந்தனர்.
இத்திட்டம் தொடங்கிய சில மாதங்கள் மட்டுமே கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட்டனர். இதையடுத்து, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், சாக்கடை நீரை அப்படியே நேரடியாக ஏரியில் கலக்க விடுகின்றனர். இதனால், நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், பயன்பாட்டிற்கு உகந்த தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பினால் குடிநீர்க் குழாய்களில், கழிவுநீர் கலந்து வருகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்துடன், காகுப்பம், பொய்யப்பாக்கம், இந்திரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு தொற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் பரவுகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிப்படைந்து வருகிறது . அதனை மீறியும் விவசாயம் செய்தால், சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதுடன், இந்த கழிவுநீரில் ரசாயன கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் ஒன்றாக சேர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியில் கலக்கப்படும் கழிவுநீர்..
மேலும் இந்த ஏரி பகுதியை சுற்றியும் கால்நடைகள் மேய்ந்து வரும் நிலையில், கால்நடைகள் சரியான பருவத்தில் சினைக்கு வருவதில்லை, இந்த தண்ணீரில் நடந்து செல்வதால் காலில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இது போன்று பல பிரச்னைகளுக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்கு கா.குப்பம் ஏரியில் புதிதாக மீண்டும் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பொதுமக்கள் இதனை, இப்பகுதிக்கு கொண்டு வர வேண்டாம் எனவும், முதலில் இந்த ஏரியை முதலில் தூர்வாரி புனரமைத்து தருமாறும்,ஏரியில் சுற்றியுள்ள ஆகாயத்தாமரை நீக்குமாறும், ஏரிகள் சுற்றி கரை அமைக்கவேண்டும் எனவும், தற்போது வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் நிலையம் நீர்நிலைகள் மத்தியில் அமையக் கூடாது எனவும், இதை வேறு ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, காகுப்பம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து நிரந்தரமாக மூடுவதற்கும், புதிதாக கட்ட முற்படும் கழிவுநீர் தொட்டியை தடுத்து நிறுத்தவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.