விழுப்புரத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 23,24 தேதிகளில் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் டிசம்பர் 23, 24 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா( DDU – GKY) திட்டத்தின் கீழ் “இளைஞர் திறன் திருவிழா” வருகின்ற டிசம்பர்23 ஆம் தேதியன்று வட்டார வளர்ச்சி அலுவலகம், காணை ஊராட்சி ஒன்றியத்திலும், டிசம்பர் 24 ஆம் தேதியன்று வட்டார வளர்ச்சி அலுவலகம், கூட்டேரிப்பட்டு ரோடு, மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை 09.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அற்ற 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண் (ம) பெண் இருபாலர்களும் ) பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இதையும் படிங்க: ரூ.60,000 வரை மாதச் சம்பளம்... 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட ஊராட்சியில் இளைஞர்களுக்கு சூப்பர் வேலை
மேலும் இவ்விழாவில் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா( DDU – GKY) பயிற்சி நிறுவனங்கள், கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (TNSDC) பயிற்சி நிறுவனம் மற்றும் பல்வேறு அரசு துறைகள் மூலம் இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் சுய விபர குறிப்பு(Bio Data), ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள், மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சியில் சேருவதற்கான ஆணை அன்றே வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Villupuram