விழுப்புரம் அடுத்து கண்டமானடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன்(67). விவசாயத்தில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் இவருக்கு உண்டு. முதலில், ரசாயனம் கலந்த செயற்கை உரத்தினை பயன்படுத்தி விவசாயம் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, நம்மாழ்வார் பேச்சினால் இயற்கை விவசாயத்திற்கு மாறிய இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன். தற்போது வெள்ளி விழா காணும் வகையில் 25 ஆண்டுகள் வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் கலக்கி வருகிறார்.
இவர் நம்மிடம் இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய நெல் ரகங்களை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் நம்மிடம் பல தகவல்களை பகிர ஆரம்பித்தார், “10 ஏக்க நிலப்பரப்பில் 51 வகை நெல் ரகங்களை பயிரிட்டு உள்ளேன். கேரளாவில் விளையக்கூடிய அரிதான நெல் வகையான முல்லன் கைமா, காட்டு யானை,கருடன் சம்பா, தேங்காய் பூ சம்பா, ஆற்காடு கிச்சிலி சம்பா,குழியடிச்சான் இந்திரராணி, சின்னார்,துளசி சம்பா,கட்டை சம்பா, சொர்ண மயூரி, குடவாழை,கொத்தமல்லி சம்பா,தங்க சம்பா, குள்ளகார், வாடன் சம்பா, நீளம் சம்பா, சீரக சம்பா,பூங்கார், சிவன் சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி போன்ற நெல் ரகங்களை பயிரிட்டு உள்ளேன்.
இடுபொருளாக ஜீவாமிர்தம், அமிலக்கரைசல், போன்றவை தெளித்து பராமரித்து வந்தால் எந்த ஒரு பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் இல்லாமல் நெற்பயிர்கள் நல்ல முறையில் விளையும். அதுபோல பூச்சிவிரட்டையும் வைத்திருந்தால் வயலுக்கு நல்லதாகும். முள்ளன் கைமா கேரளாவில் விளையக் கூடியது வாசனை மிக்க நெல் ரகமாகும்.
ரத்தசாலி என்ற நல்ல சிவப்பு நிறத்தில், சிறிய மணிகளாக உள்ள அரிசி , ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் திறன் கொண்டது.மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் உடல் திடம் பெறும். பூங்கார் நெல்லில் வைட்டமின் பி1 இந்த அரிசியில் இருப்பதனால் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது.
குள்ளகார் நெல் ரகம் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. காட்டுயானம் நெல்லை சாப்பிட்டு வந்தால் நீடித்த எனர்ஜி, விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும். மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாடு, பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை சார்ந்த தொந்தரவுகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை சீராக்கக் கூடிய ஒரு சிறந்த ரகம் இந்த தங்க ரக சம்பா சிறந்த ரகமாகும்.இதுபோன்று ஒவ்வொரு நெல் ரகமும் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.
எனவே அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் முறையை பின்பற்றி நம் வருங்கால சந்ததியினர் நூறாண்டு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும் உணவுகளையும் கொடுக்க வேண்டும் அதற்காக அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் இயற்கை விவசாயம் முறையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டால் எனக்கு தெரிந்து பல தகவல்களை நான் தருவேன்” என இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன் கூறினார். என்னை தொடர்பு கொள்வதற்கு 9840559532 என்ற எண்ணை அழைத்தால் இரவு 8 மணிக்குள் நிச்சயமாக உங்களுக்கு பதில் அளிப்பேன் என ராதாகிருஷ்ணன் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Paddy fields, Rice benefits, Tamil News, Villupuram