ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் இடைவிடாத பெய்யும் கனமழை... நிரம்பி வரும் நீர் நிலைகள்...

விழுப்புரத்தில் இடைவிடாத பெய்யும் கனமழை... நிரம்பி வரும் நீர் நிலைகள்...

நிரம்பி

நிரம்பி வரும் நீர் நிலைகள்

Viluppuram District News : கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழைக்கு நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டு தினங்களுக்கு கன மழை இருக்கும் நிலையில் 28 மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழைக்கு நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. நீர்நிலைகள் அணைகள், தடுப்பணைகள் ஆகியவை நிரம்பி வழிகிறது. அதுபோல்,தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

சாலைகள் சேரும் சகதியாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சாலையில் திடீர் பள்ளங்களும் ஏற்படுகின்றன.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்... பொதுமக்கள் கடும் அவதி!

பல இடங்களில் நகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அலைகள் அதிக உயரம் எழும்புகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதாக கடலோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண முகங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram