ஹோம் /விழுப்புரம் /

தமிழகத்தில் களைக்கட்டிய கலைத்திருவிழா.. மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான அரசு மாணவன்

தமிழகத்தில் களைக்கட்டிய கலைத்திருவிழா.. மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான அரசு மாணவன்

X
Govt

Govt student selected for state level competition in melody section

Villupuram News: மாவட்ட அளவில் பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் தேர்வாகியுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலை திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி அளவில், வட்டார அளவிலும் ,மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன அதில் மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளி காட்டினர்.

அதேபோல் மாவட்ட அளவில் பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் தேர்வாகியுள்ளனர்.

அந்த வகையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிஎன்தோப்பு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் கோகுல் ஸ்ரீநாத் என்ற மாணவன் மெல்லிசை பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து,பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் நடக்கும் நடன போட்டிக்கு தயாராகும் தஞ்சை அரசு பள்ளி மாணவிகள்..

ஸ்ரீநாத் என்ற மாணவன் கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை பெயிண்டிங் வேலை செய்பவர். சிறு வயது முதலே கோகுல் ஸ்ரீநாத்துக்கு இசை மீது தீராத பற்று. சிறுவயதில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி கண்டுள்ளார்.

அதன்பின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பள்ளி கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் பின் மாவட்ட அளவிலும் முதலிடத்தில் பிடித்து தற்போது மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நிச்சயமாக மாநில அளவில் வெற்றி கண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க இருப்பதாக நம்பிக்கையுடன் ஸ்ரீநாத் கூறியுள்ளார். ஸ்ரீநாத்துக்கு பள்ளி சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் தொடர் ஆதரவளித்து வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Tamil News, Villupuram