Home /viluppuram /

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவி.! 

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவி.! 

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவி முதலிடம்..

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவி முதலிடம்..

Villupuram NEET State Topper Brindha | விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பெண் நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி பிருந்தா நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

விழுப்புரம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றார்.

இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:  பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவியின் சாதனை பயணம்.. விழுப்புரத்துக்கு இவரால் பெருமை..

நீட் தேர்வில் 467 மார்க் எடுத்து இவர் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாணவியின் குடும்ப பின்னணி:

மாணவியின் தந்தை கடந்த 2016ம் ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். தாயார். விஜயலட்சுமி பால் சொசைட்டியில் ஊழியராக இருக்கிறார். பிருந்தாவுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவருடையது தாயின்  வருமானத்தில் மகள்கள் 3 பேரையும் படிக்க வைத்துள்ளார். தாயார் பட்ட கஷ்டத்துக்கு நான்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார் மாணவி பிருந்தா.

கொரோனா காரணமாக பிளஸ் 1 ஆல் பாஸ் செய்திருந்தாலும், உறைவிட பள்ளியில் பிளஸ் 1 பாட திட்டங்களும், பிளஸ் 2 பாட திட்டம் மற்றும் என்.சி.ஆர்.டி. பாட திட்டங்களையும் சேர்த்து பாடங்கள் நடத்தினர். காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆசிரியர்கள் எங்களுடன் இருந்து பயிற்சி கொடுத்ததால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது.

இந்த பயிற்சியே நீட்தேர்விலும் சாதிக்க முடிந்ததாக மாணவி பிருந்தா தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Neet Exam, Villupuram

அடுத்த செய்தி