Home /viluppuram /

ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை.. செல்ஃபி எடுக்க குவியும் மக்கள் கூட்டம்..

ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை.. செல்ஃபி எடுக்க குவியும் மக்கள் கூட்டம்..

விழுப்புரம்

விழுப்புரம் - செஞ்சி கோட்டை

Gingee Fort : இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை, மூவண்ணக்கொடி நிறத்தில் ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து செல்பி எடுத்து செல்கின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை மூவர்ணக்கொடி நிறத்திலான விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.


விழுப்புரம் - செஞ்சி கோட்டை


இதனால் செஞ்சி கோட்டை தற்போது மூவர்ண நிறத்தில் ஜொலிக்கின்றது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ராஜகிரி கோட்டையின் முகப்பு பகுதிக்கு தெற்கில் உள்ள கோட்டை மதிலில் 150 மீட்டர் துாரத்திற்கு மின் விளக்குகளால் மூவர்ண கொடி நிறத்தில் ஒளிரச் செய்துள்ளனர்.

ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை


வரும் 15ம் தேதி சுதந்திர தினம் வரை மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின் விளக்குகள் ஒளிரும். கோட்டைக்கு வெளிப்பகுதியில் இருப்பதால் பொது மக்கள் இதை கண்டுகளித்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Villupuram

அடுத்த செய்தி