ஹோம் /விழுப்புரம் /

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்காததால் விழுப்புரம் விவசாயிகள் கவலை.. 

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்காததால் விழுப்புரம் விவசாயிகள் கவலை.. 

X
விழுப்புரம்

விழுப்புரம் கரும்பு விவசாயிகள் கவலை

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு அதிகமாக விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர். கடந்த முறையை போலவே வரும் ஆண்டும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்பட என விழுப்புரம் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு அதிகமாக விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர். கடந்த முறையை போலவே வரும் ஆண்டும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த முறை கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க : முதல் பரிசு ரூ.10 லட்சம்... விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடந்த பொங்கலை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவரிடம் கேட்டபோது,  “அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் உழவர்கள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்.

விதை, உரம் உள்ளிட்டவற்றுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளோம். இந்த பொங்கல் கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் விதை வாங்கிய செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, ஜனவரி 2ம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும். தமிழக அரசு விவாசயிகளிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்” என தமிழக முதலமைச்சருக்கு விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local News, Pongal 2023, Vizhupuram