ஹோம் /விழுப்புரம் /

இயற்கை விவசாயத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்க வழி சொல்லும் விழுப்புரம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்க வழி சொல்லும் விழுப்புரம் விவசாயி!

X
Villupuram

Villupuram farmer mixes 51 types of traditional rice varieties... double profit

Viluppuram farmer | விழுப்புரம் அடுத்து கண்டமானடி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன் 10 ஏக்கரில் 51 வகை பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டு மகசூல் ஈட்டி வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அடுத்து கண்டமானடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன்(67). விவசாயத்தில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் இவருக்கு உண்டு. முதலில், ரசாயனம் கலந்த செயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளார்.

அதனால் நிலத்தில் ஏற்பட்ட பாதிப்பாலும் நம்மாழ்வார் பேச்சின் மூலம் இயற்கை விவசாயத்திற்கு மாறி உள்ளார். தற்போது, மன திருப்தியுடன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இயற்கை விவசாயத்தில் பல்வேறு விருதுகளையும் ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார். தற்போது அவருடைய வயல் நிலத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை முறையில் 51 வகையான பாரம்பரிய இயற்கை நெல் ரகங்களை பயிரிட்டு உள்ளார். இதற்கு முதலீடாக 2 லட்சம் வரை செலவு செய்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், பாரம்பரிய இயற்கை நெல் ரகங்களான சிவன் சம்பா, துளசி சம்பா கட்டை சம்பா சொர்ண மயூரி குழியடிச்சான் இந்திராணி சின்னார் தேங்காய் பூ சம்பா காட்டு யானை கருடன் சம்பா குடவாழை நீளம் சம்பா வாடன் சம்பா போன்ற 51 வகையான இயற்கை நெல் பயிரிட்டு தற்போது சாகுபடி செய்து வருகிறார். அவை இப்போது பாதிக்கு பாதி ரகங்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல் ரகங்களை பாதி அரிசியாகவும் மீதியை நெல்லாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 10 ஏக்கர் நிலப்பரப்பிற்கு ரூபாய் 2 லட்சம் முதலீடு போட்டு, நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயமாக நான்கு லட்சம் வரை மகசூல் ஈட்டலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒரு ஏக்கரில் 25 நெல் முட்டைகள் வரும். ஒரு நெல் மூட்டையில் இருந்து 50 கிலோ வரை அரிசி எடுக்கலாம். ஒரு நெல் மூட்டை 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதுவே அரிசியாக இருந்தால் 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர்களில் ஒரு கிலோ அரிசி என்பது மற்றும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கை முறையில் விவசாயம் செய்வது ஒரு மிகப்பெரிய விஷயம் அல்ல . நல்ல திட்டமிடல் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம், அதற்கு தேவையான அறிவு ஆகியவை இருந்தால் இயற்கை விவசாயத்தில் நிச்சயமாக நல்ல லாபம் பார்க்க முடியும், நமக்கு மட்டுமில்லாமல் நம் சந்ததியினருக்கும் நல்ல ஆரோக்கியமான உணவையும், உடல் நலத்தையும் தர அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்தி செய்யும் விவசாயத்தை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டும் “ என இயற்கை விவசாயி ராதாகிருஷ்ணன் கூறினார்.

First published:

Tags: Agriculture, Local News, Villupuram