Home /viluppuram /

இருவர் மீது 11 பேர் தாக்குதல்.. பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு.. விழுப்புரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

இருவர் மீது 11 பேர் தாக்குதல்.. பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு.. விழுப்புரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

Villupuram District Today's News Collection

Villupuram District Today's News Collection

Villupuram District: விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய செய்தி தொகுப்பு 

  வரலாற்று துறை சார்பில் தொல்லியல் கண்காட்சி

  விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் கண்காட்சி நடந்தது.

  கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். உதவி பேராசிரியர் ரமேஷ் அறிமுக உரையாற்றினார். ரவிக்குமார் எம்.பி., கண்காட்சியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

  ஓய்வுபெற்ற தமிழக அரசு தொல்லியல் துறை உதவி இயக்குநர் பூங்குன்றன் கலந்து கொண்டு தமிழக நடுகற்கள் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் விளக்கவுரையாற்றினார்.

  வி.ஏ.ஓ.,க்கள்,நில அளவைத்துறை ஆய்வாளர்களுக்கு பயிற்சி

  விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் வருவாய்த்துறையின் மூலம் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் நில அளவைத்துறை ஆய்வாளர்கள், பொதுமக்களுக்கான பட்டா மாறுதல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி நடந்தது.

  பயிற்சியை ஆய்வு செய்து, ஆட்சியர் மோகன் கூறியதாவதது,

  இப்பயிற்சியில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவை குறித்த கருவிகள் எவ்வாறு பயன்படுத்துதல், நிலத்தின் பரப்பை கணித முறையில் கனித்தல், புலம் அமைத்தல், புதிய கோப்புகள் தயாரித்தல், பட்டா வகைப்பாடுகள் தெரிந்துகொள்ளுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அன்றாடம் பொதுமக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான பட்டா வழங்குதல், பட்டா உட்பிரிவு செய்தல் குறித்த கோரிக்கைகள் அதிகளவு வரப்படும்.

  இவ்வாறு வரக்கூடிய மனுக்கள் மீது நில அளவை ஆய்வாளருடன் உடனடியாக பணிகளை மேற்கொண்டு உடனுக்குடன் ஆணைகளை வழங்க வேண்டும் என்றார்.

  விழுப்புரம் மாவட்டத்தில்  14ம் தேதி பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

  பொது விநியோகத்திட்டத்தின் சேவைகள் குறித்து விழுப்புரம் மாவட்டத்தில்  14ம் தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குடிமைபொருள் தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடக்கிறது.

  இம்முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் குறித்த கோரிக்கை மற்றும் மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனுவினை வழங்கலாம்.

  முன்னாள் படைவீரர்கள் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது.

  இதில், 41 நபர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று மனுக்கள் பெறப்பட்டது. ஒரு பயனாளிக்கு திருமண நிதியுதவியும், கல்வி நிதியுதவியாக ஒரு பயனாளிக்கும், வங்கி வட்டி மானிய ஆணைகள் வழங்கப்பட்டது. அதிக கொடிநாள் வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

  விழுப்புரம் அருகே தகராறு ஏற்பட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

  விழுப்புரம் அருகே தகராறில் இரண்டு பேரை, 11 பேர் சேர்ந்து தாக்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

  விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு காலனியை சேர்ந்தவர் ராமன் மகன் தேவபிரசாந்த், 18; இவர் தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன், அங்குள்ள பெருமாள் கோவில் முன் உள்ள கடையில் நேற்று முன்தினம் இரவு மொபைல் ரீசார்ஜ் செய்ய சென்றார்.

  அப்போது, பானாம்பட்டை சேர்ந்த பாலமுருகன், தனது பைக்கால், தேவபிரசாந்த் மீது பைக்கை மோதுவதுபோன்று வந்துள்ளார்.

  இதை தேவபிரசாந்த் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் 10 நபர்கள் சேர்ந்து தேவபிரசாந்த், விஜயகுமாரை தாக்கி ஜாதி பெயரை கூறி திட்டினர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

  இது குறித்து பாலமுருகன் மற்றும் பத்துபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

  5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

  விழுப்புரம் செஞ்சி சாலையில் அமைந்துள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்குள்ள மலையில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் முட்டத்தூர் இளைஞர்கள் களஆய்வு மேற்கொண்டனர்.

  மலையில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமதளப்பாறை இருந்தது. அதற்கு அருகில் இருக்கும் பாறையில் சிவப்பு வண்ண ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

  அதன்பின் ஆய்வு செய்ததை அடுத்து,இந்த ஓவியத்தொகுப்பில் மனிதர்கள் குழுவாக இருக்கின்றனர். வேட்டை சமூகமாக இருந்தபோது விலங்குகளை எதிர்த்து போரிடுவதற்கான பயிற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். இதில் விலங்கின் உருவமும் இடம்பெற்றுள்ளது.
  இந்த ஓவியங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என செங்குட்டுவன் கூறினார்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

   
  Published by:Arun
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி