ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதல் உங்கள் பகுதி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (08-12-2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம், கண்டாச்சிபுரம் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இங்கே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

காகுப்பம், கிழக்கு சண்முகபுரம் காலனி, திருநகர், லட்சுமி நகர், மகாராஜபுரம், ராகவன்பேட்டை, ஆசிரியர் நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, எருமனந்தாங்கல், தொடர்ந்தனூர், கிழக்கு புதுச்சேரி சாலை, இ.பி.காலனி, கீழ்பெரும்பாக்கம், எம்.டி.ஜி. நகர், சகுந்தலா நகர், ரங்கநாதன் நகர்.

Must Read : ராமேஸ்வரம் சென்றால் இந்த இடத்திக்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

கண்டாச்சிபுரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்:

காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டனூர், மேல்வாலை, ஒதியத்தூர், சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு. பில்ராம்பட்டு, பரனூர், வி.சித்தாமூர், காடகனூர்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Villupuram