Home /viluppuram /

Villupuram News: இந்த வருஷம் நீல நிறத்தில் இலவச சைக்கிள்கள்.. மகிழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள்..

Villupuram News: இந்த வருஷம் நீல நிறத்தில் இலவச சைக்கிள்கள்.. மகிழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள்..

விழுப்புரம்

விழுப்புரம் - இலவச சைக்கிள்கள் விரைவில் விநியோகம்

Villupuram District : விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளுக்கு வந்துள்ள சைக்கிள்களின் உதிரிபாகங்களை ஊழியர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள், தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் உதிரிபாகங்களாக அனுப்பி வைக்கப்பட்டு பாகங்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

2022-2023  கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் சென்னையில் இருந்து பெறப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு அதை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்குவதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இலவச மிதிவண்டிகள்


விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 136 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு படித்து வரும் 19,463 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் வந்துள்ளன.

விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளுக்கு வந்துள்ள சைக்கிள்களின் உதிரிபாகங்களை ஊழியர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதிரி பாகங்களாக இலவச மிதிவண்டிகள்


கடந்த ஆண்டுகளில் பச்சை நிறத்திலான சைக்கிள்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது நீல நிற சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் சைக்கிள்கள் விரைவில் வழங்கப்படவுள்ளது குறித்து மாணவர்கள் கூறுகையில்,  “தமிழக அரசாங்கம் வழங்கும் இந்த விலையில்லா மடிக்கணினி மற்றும் சைகைகள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிற

உதிரி பாகங்களாக இலவச மிதிவண்டிகள்


தால், முன்கூட்டியே வருவதற்கு இந்த சைக்கிள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் எப்போது எங்களுக்கு சைக்கிள் வழங்குவார்கள் என்று ஆர்வமாக இருக்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்து சைக்கிள்களில் உதிரிபாகங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி