ஹோம் /விழுப்புரம் /

Cyclone Mandous | மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் 

Cyclone Mandous | மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் 

X
புயலை

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் 

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து வட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்திடும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து வட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 40 கி.மீ கடலோர பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 19 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கடலோர பகுதிகளில் அதிகப்படியான பாதிப்பு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை மையம் அலெர்ட்

இவற்றினை எதிர்கொள்ளும் வகையில் 12 புயல் நிவாரண மையங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அளித்திடவும் மையங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்திற்கு பேரிடர் மீட்புக்குழு உறுப்பினர்கள் வந்தடைந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்தித்து கனமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இந்த குழுவில் சுமார் 40 பேர் வந்துள்ளனர்.

மேலும் அதிக கனமழை மற்றும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் விதமாக புது மற்றும் உயர் ரக உபகரணங்களுடன் வருகை புரிந்துள்ளனர்.

இதையும் படிங்க : அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல்.. மாமல்லபுரத்தில் நாளை கரையை கடக்கிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

கனமழை அதிகமாக பெய்யக்கூடிய இடங்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுமார் 30 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சில வீரர்கள் மட்டும் இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டு வேறு ஏதேனும் பகுதிகளில் மழை பாதிப்பு இருப்பின் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

கடலோர பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கனமழை மற்றும் புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Vizhupuram