முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் 539 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரத்தில் 539 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

X
Villupuram

Villupuram District Collector praised Chief Minister Stalin for planning schemes

Villupuram District Collector | இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழு மூலம் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் பற்றிய ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்களை முதல்வர் வகுத்துள்ளதாக  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த ‘ஓயா உழைப்பின் ஓராண்டு” சாதனைகள் மற்றும் 539 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

இந்த சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய  மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்கான முத்தான திட்டங்களாகும் என கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நடன கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் விழுப்புரம் சுற்றியுள்ள பாலப் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மகளிர் சுய உதவி குழு மூலம் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் பற்றிய ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், கடன் உதவிகள், நிவாரண உதவி , தையல் இயந்திரங்கள், மின்மோட்டார்கள், பட்டுப்புழு வளர்ப்புக்கு உபகரணங்கள், சலவை பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி வாகனங்கள், போன்ற நிதி உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பல வகையான ஸ்டால்களை பொதுமக்கள் கண்டு களித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Villupuram