Home /viluppuram /

தென்பெண்ணை ஆற்றில் இறங்க தடை- விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் இறங்க தடை- விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தென்பெண்ணை ஆற்றில் நீர் அதிகமாக செல்லும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் யாரும் இறங்க கூடாது என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 3,000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5ம் தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ- மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர்களை ஈடுபட வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி