விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோலியனூர் ஊராட்சி, பனங்குப்பம் ஊராட்சி தொடர்ந்தனூர் ஊராட்சி,சாலை அகரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கும் பொருட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த பணிகளை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 688 ஊராட்களில் உள்ள 3689 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 7562 சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு 2280 பணியாளர்கள், சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டிகள் 1672 பணியாளர்கள் மூலம் நீர் நிரப்பபட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவையான குடிநீரினை சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் வழங்கிடும் பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டு, இப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்திட வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இப்பணிகள் கண்காணிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் சரியான அளவில் குளோரின் கலந்து பொதுமக்களின் தேவைகேற்ப சுத்தமான குடிநீர் விநியோகம் செய்திடவும் சுத்தம் செய்யும் பணியை விரைந்து முடித்து நீரை தேக்கி விநியோகம் செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram