ஹோம் /விழுப்புரம் /

Villupuram News : விழுப்புரம் கலெக்டரின் அதிரடி நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்..

Villupuram News : விழுப்புரம் கலெக்டரின் அதிரடி நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்..

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News : விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக காட்சிப் பொருளாகவே  இருக்கும் சமுதாய கழிப்பறைகள் உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக காட்சிப் பொருளாகவே இருக்கும் சமுதாய கழிப்பறைகள் உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்.

விழுப்புரம் நகராட்சி உட்பட்ட ராகவன் பேட்டை மற்றும் கீழ்பெரும்பாக்கம், பா குப்பம், திரௌபதி அம்மன் கோவில் தெரு, பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது.

கடந்த மூன்று வருட காலமாக அதை பயன்படுத்த முடியாத நிலையில் வெறும் காட்சி பொருளாகவே இந்த கட்டிடம் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பொது வெளியில் செல்லக் கூடிய அவலம் இருக்கிறது. இதுகுறித்து விழுப்புரம் நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார் அப்போது சமுதாயக் கழிவறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நகராட்சி அதிகாரியிடம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆட்சியர் மோகனின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Villupuram