முகப்பு /விழுப்புரம் /

கொளுத்தும் வெயிலுக்கு ரெஸ்ட்.. ஜில்லுனு மாறிய விழுப்புரம் கிளைமேட்!

கொளுத்தும் வெயிலுக்கு ரெஸ்ட்.. ஜில்லுனு மாறிய விழுப்புரம் கிளைமேட்!

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் தினமும் அவதி அடைந்து வந்தனர். இதனால், உடல் வெப்பத்தை தணிக்க குளிர்ச்சி தரும் பழங்கள், பழச்சாறுகள் குடித்து வந்தனர்.

இந்நிலையில், உடலையும், மனதையும் குளிர்விக்கும் விதமாக,திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர், கானை போன்ற பல பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால், சூடான கிளைமேட் மாறி குளிர்ச்சி நிலவியது.

இதேபோல, விழுப்புரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன், இடி மின்னலுடன் கன மழைபெய்ய தொடங்கியது. திடீரென மழை பெய்த இந்த மழையால், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

top videos

    இவ்வாறு தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த மழையால் விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    First published: