ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை... படுஜோராக நடைபெறும் கேக் விற்பனை..!

விழுப்புரத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை... படுஜோராக நடைபெறும் கேக் விற்பனை..!

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்

Viluppuram Christmas Cake Sale : விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதில் பிளம் கேக் வகைகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அதில் புத்தாடைகளும், கேக் வகைகளும், அறுசுவை விருந்துகளும் குறைவில்லை என்று சொல்லும் வகையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் பேக்கரிகள், சுவீட் கடைகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுபவர்கள் ஆர்டர் கொடுப்பதற்காக கூடும் கூட்டத்தையும் காண முடிகிறது.

இதையும் படிங்க : மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை.. விழுப்புரத்தில் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம்..

இதனால் விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதில் பிளம் கேக் வகைகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் கிறிஸ்துமஸ்க்கு ரோஸ் மற்றும் ஆரஞ்சு வெல்வெட், ரெயின்போ கேக், ஸ்ட்ராபெரி கேக், பட்டர்பிளை கேக், பிளாக் பாரஸ்ட் கேக், ஃப்ரூட் கேக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் கேக்குகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிளம் கேக் வகையில் சாண்டா கிளாஸ், ஸ்னோ ஒயிட் போன்றவைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், ஹோம் மேடு சாக்லேட்டுகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருவதால் அவையும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன என்று கேக் தயாரிப்பவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இன்று கிறிஸ்துமஸ் கேக் விற்பனை சூடு பிடித்துள்ளது. கிறிஸ்துமஸ் கேக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பீஸ் கேக் 10 ரூபாயிலிருந்தும் அரை கிலோ கேக் 150 ரூபாயிலிருந்தும் கிடைக்கும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local News, Vizhupuram