ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

Villupuram Alagu Nachyamman temple Festivel | விழுப்புரம் காணை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் விமர்சையாக நடைபெற்ற அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக பல ஊர்களில் உள்ளூர் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போன்ற திருவிழாக்களின் போது பொதுமக்கள் கோயில்களில் பொங்கலிட்டு, தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.அதுபோல விழுப்புரம் காணை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் உள்ளூர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மாம்பழப்பட்டு, கருங்காலி பட்டு, காங்கேயனூர், பள்ளியந்தூர், சென்னகுணம், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு அவர்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் வளையல் கடைகள், உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பொருட்களை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

அடி பிரதட்சிணம், அங்க பிரதட்சணம், பொங்கல் வைத்து வழிபாடு செய்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

First published:

Tags: Local News, Villupuram